“மதுரை திமுக மாநாடு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்”.., துரை வைகோ நெகிழ்ச்சி..!!
*மதுரை மதிமுக அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு*
*திருமண விழா போல பழதட்டுடன் தொண்டர்களுக்கு அழைப்பு*
*திருச்சி தெற்கு மாவட்ட மதிமுகவினரின் நூதன முயற்சி*
மறுமலர்ச்சி திமுக சார்பில் வருடா, வருடம் செப்டம்பர் 15-ஆம் நாள் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டினை பல்வேறு மாவட்டங்களில் வெகு சிறப்பாக நடத்துவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு மதுரை – வலையன்குளத்தில் மறுமலர்ச்சி திமுக அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழாவினை நடத்துகின்றது.
கொரோனா தடைக்காலத்திற்குப் பின்பு நடைபெறும் மாநாடு என்பதாலும், அண்ணன் துரை வைகோ அவர்கள் முதன்மைச் செயலாளர் பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் மாநாடு என்பதால் கட்சிக்காரர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து சுவர் விளம்பரங்களை மதிமுகவினர் எழுதி வருகின்றனர்.
இதில், திருச்சி தெற்கு மாவட்ட மதிமுகவினர் நூதன முயற்சியாக இல்லத்தில் நடைபெறும் திருமண விழாக்கள் போல, அண்ணா பிறந்த நாள் மாநாட்டிற்கு பத்திரிகை அச்சடித்து தாம்பூலத் தட்டில் பழங்கள் மற்றும் வெற்றிலை பாக்குடன் வீடு வீடாகச் சென்று ஆயிரக்கணக்கான கட்சித் தோழர்களை அழைப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ராஜன் பன்னீர்செல்வம், புஷ்பா சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை, மாவட்ட அமைப்பாளர் ஆர்.ராமன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்களுக்கு முதல் பத்திரிகை வழங்கி அழைத்தனர்.
பத்திரிகையில் திருமண பத்திரிகை போல அண்ணாவின் பெயரைப் பொறித்து, மாநாடு நடத்துகின்ற மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.முனியசாமி பெயரையும் அச்சடித்து, வலதுபுறம் அழைப்பு விடுக்கும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
திருமண அழைப்பிதழில் இருவீட்டார் அழைப்பு இருப்பது போல, இந்தப் பத்திரிகையில் இருமாவட்ட அழைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் நல்வரவை விரும்பும் என உறவினர்கள் பெயர்கள் இருப்பது போல மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் கூறியது.
செப்டம்பர் 15-ல் மதுரையில் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை தலைவர் வைகோ நடத்துகின்றார்.
கழகத்தின் முதன்மைச் செயலாளராக அண்ணன் துரை வைகோ அவர்கள் பொறுப்பேற்ற பின்பு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் கட்சித் தோழர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
முப்பது வருடங்களாக மறுமலர்ச்சி திமுக செம்மாந்து நிற்பதற்கு ஒரே காரணம் தொண்டர்கள் தான்.
அத்தகைய வலிமை பொறுந்திய தொண்டர்களை, இந்த மாநாட்டிற்கு வீட்டிற்குச் சென்று அழைக்க வேண்டும் என்பதற்காக திருமண விழா போல பத்திரிகை அச்சடித்து, தாம்பூலத் தட்டுடன் பழங்கள் வெற்றிலை பாக்கு ரூ.11 பணம் வைத்து அழைக்கின்றோம்.
செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஒன்றியங்கள், நகரம், கிளைக் கழகம் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களை அழைப்போம்.
இந்த மாநாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்டத்தில் இருந்து ஐம்பது வாகனங்களில் ஆயிரம் பேர் கலந்து கொள்வோம்.
நிச்சயம் மறுமலர்ச்சி திமுக வரலாற்றில் மதுரை அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..