மதுரையில் கஞ்சா விற்பனை – பெண் கைது

திருப்பரங்குன்றம் அருகே கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நாகமலை-புதுக்கோட்டை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஜெயந்தி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 5 கிலோ கஞ்சா வைத்திருந்துள்ளார்.

இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஜெயந்தியையும் கைது செய்தனர். மேலும், விசாரணையில் ஜெயந்தியின் கணவர் மலைராஜா என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மலைராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What do you think?

‘இந்தியாவுக்கு எதிரான தொடர், தெ.ஆ. அணி அறிவிப்பு’ முன்னாள் கேப்டனுக்கு வாய்ப்பு!

‘கொரோனா வைரஸ் எதிரொலி’ டிவிட்டர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!