கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்று சொல்லக்கூடிய கள்ளழகர் திருக்கோவிலுடைய சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் கள்ளழகர் எதிர்சேவையும் தொடர்ச்சியாக 5ஆம் தேதி அதிகாலை வரைக்கும் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எதிர்சேவை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி காலை 5:45 மணி முதல் 6.12 மணிக்குள்ளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெற உள்ளது. எனவே இந்நாளில் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய தினம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.