இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைப்பெற்றது. அதில் பேசிய அவர், இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், இறுதியில் அனைத்து இந்திய மக்களும் இந்தியை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது என்றும், இந்தித்திணிப்பை எங்களின் தமிழ்நாடு எப்பொழுதும் வென்றே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாகஇருந்தாலும், இறுதியாக அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்;” என்று அமித்ஷா பேசியுள்ளார்.