சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல் முதல்வருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவியேற்ற பிறகு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என திட்டத்தைக் கொண்டு வந்து அதற்கான பயிற்சியி வகுப்புகளையும் தொடங்கினார். இதில் ஏராளமானோர் சேர்ந்து படித்து வந்தனர். இந்நிலையில் ஆண்களுக்கு சமமாக ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்களும் சேர்ந்து தற்போது அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை.
இன்று அமைச்சர் சேகர்பாபு அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். அதில் மூன்று பெண்கள் இடம்பெற்றிருந்தன. இதுத் தொடர்பாக மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
சந்நிதியில் சமத்துவ சுடரொளி!
கருவறையில் பாகுபாடற்ற இறைப்பணி!
சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்.
அகற்றப்பட்ட முள்மட்டுமல்ல, சூட்டப்பட்ட புதுமலர்!
போற்றி மகிழ்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்நிதியில் சமத்துவ சுடரொளி!
கருவறையில் பாகுபாடற்ற இறைப்பணி!
சமூகநீதி வரலாற்றில் புதிய மைல்கல்.
அகற்றப்பட்ட முள்மட்டுமல்ல,
சூட்டப்பட்ட புதுமலர்!போற்றி மகிழ்வோம்.@CMOTamilnadu pic.twitter.com/OWsGcA5xxv
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 14, 2023
இதையும் படிக்க:
கரு சுமக்கும் பெண்களும் கருவறைக்குள்… வரலாறு காணாத செயல்… முதல்வரின் அடுத்த சாதனை..!