“மகாளய அமாவாசை விரதம்” முன்னோர்கள் ஆசி கிடைக்க..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
புரட்டாசி அமாவாசை நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றி முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். அதனுடன் இதை செய்தால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
வருடத்தில் எத்தனை அமாவாசைகள் வந்தாலும் இந்த 3 அமாவாசைகள் மட்டுமே மிகவும் விஷேஷமாக பார்க்கப்படுகிறது.. அப்படியாக தை அமாவாசை, ஆடி அமாவாசை., மற்றும் புரட்டாசி அமாவாசை, இந்த 3 அமாவாசை நாட்களில் நாம் தர்ப்பணம் கொடுத்து முறையாக வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை…
இந்த மாதத்தில் வரும் அமாவாசையை “மகாளய அமாவாசை” என அழைப்பார்கள்.. அதற்கு காரணம் ஆவணி மாதம் பௌர்ணமி முடிந்த மறுநாள் இந்த மகாளய நாட்கள் தொடங்கி 15 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். எனவே தான் இந்த மாதத்தில் வரும் அமாவாசையை “மகாளய அமாவாசை” என அழைப்பார்கள்..
அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்று.., அமாவாசை நாளில் அன்னதானம் அளித்தால் இன்னும் பலன் கிடைக்கும். இது நம் முன்னோர்களுக்கு அன்னம் கொடுப்பதற்கு சமமாகும்.
முன்னதாக கோவில்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். அத்தோடு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்..
அதன் பின் முடிந்த அளவிற்கு ஒரு ஐந்து பேருக்காவது அன்னத்தை தானமாக அளிக்க வேண்டும்..
பசுக்களுக்கு பழங்கள், அகத்தீக்கீரை கொடுத்தால்.., தடைபட்ட காரியங்கள் நீங்கும்.
அமாவாசை அன்று அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து, சைவ உணவுகள் சமைத்து முன்னோருக்கு படையல் இட்டு வயதானவர்கள் மூன்று பேருக்கு தானம் அளித்தால் அது அவர்களுக்கு கொடுப்பதற்கு சமம் ஆகும்..
நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருவதாக சொல்லப்படுகிறது…
அப்படி அவர்கள் நம் வீட்டிற்கு வரும் வேலையில் நாம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.., கருப்பு உடை அணிந்து இருக்க கூடாது., வீட்டில் சண்டை சச்சரவு இருக்க கூடாது., இப்படி இருந்தால் அது நம் முன்னோர்களுக்கு அவ மரியாதை கொடுக்கும் என சொல்லப்படுகிறது..
அவர்களின் ஆசி என்றென்றும் இருக்கும்.., மேலும் உங்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கி நல்ல காரியங்கள் நடக்கச் செய்வார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..