மகளிர் உரிமைத் தொகை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இன்றைக்கே முன்னோட்டமாக 1000 ரூபாய் வரவு வைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகின. இதில் தகுதியுள்ளவர்களாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த திட்டம் நாளை முதல் துவங்கிறது. விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் உரிமை தொகையை பெறுவதற்கான பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு 8000 ஏடிஎம் கார்டுகள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் சரிபார்ப்புக்கு பின், ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் தொடங்கி வைத்த பின்னர் குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 செலுத்தப்படும் என்றும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டுகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு கோடிக்கும் மேல் பயனாளிகள் உள்ளதால் ஒரே நாளில் பணம் வரவு வைக்க முடியாது என்பதால் இன்றைய தினமே பணத்தை வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாளைய தினம் பிரதமை என்பதால் சர்வ அமாவாசை தினமான இன்று ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.