டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள் – பிரதமர் நரேந்திர மோடி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே டெல்லியில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி இது வரை இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக, விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் டுவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், அவர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நிலவக் கூடிய சூழ்நிலை தொடர்பாக தீவிரமான ஆய்வு நடத்தி உள்ளேன். காவல்துறையினர் மற்றும் பிற அமைப்புகள் அமைதியை நிலைநாட்டுவதற்கு களத்தில் நிற்கின்றன. அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை நமது முக்கியமான பண்புகள். எனவே, எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அமைதி மற்றும் சகோதரத்துவம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும். முடிந்த அளவு விரைவாக அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

What do you think?

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- சோனியா காந்தி வலியுறுத்தல் !

தேமுதிகாவிற்கு ஒரு மாநிலங்களவை பதவி கிடைக்கும் – பிரேமலதா விஜயகாந்த் !