தொல்லை தரும் தேமல்..! விரட்டி அடிக்கும் முறை..!
தோல்களில் உண்டாகும் தொற்று நோய்களில் முதலாக இருப்பது தேமல் தான். இந்த தொற்றானது மலேசேசியாஃபர்ஃபர் என்கிற கிருமியால் தான் வருகிறது. இந்த தேமல் மற்றவர்களுக்கு எளிமையாக வரவும் தன்மை கொண்டது.
இத்தொற்று உள்ள ஒருவரின் சோப்பு, ஆடை மற்றும் வியர்வையின் வழியாக மற்றவர்களுக்கு எளிமையாக பரவக்கூடியது. இத்தொற்று இளைஞர்களை அதிகம் பாதிக்கும் தொற்றுகளில் ஒன்றாகும்.
அறிகுறி:
கை, கால், கழுத்து, தோள்பட்டை, முகம், மார்பு, தொடை, சருமம் ஆகிய இடங்களில் நிறம் குறைந்து அல்லது நிறம் அதிகரித்து ரவுண்ட் ரவுண்டாக மெல்லிய செதில்களுடனும் காணப்படும்.
நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வியர்வை அதிகமாக சுரப்பவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் தேமல் அதிகம் தொல்லை கொடுக்கலாம்.
தீர்வு:
வியர்வை அதிகமாக சுரக்கும் நபர்கள் தினமும் இருவேளையும் கடலை மாவு அல்லது பச்சை பயிறு மாவு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
உங்களுக்கு சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்றால் மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான சோப்பு பயன்படுத்தலாம்.
துளசி இலைகளை நன்றாக பேஸ்ட் செய்து தேமல் உள்ள இடத்தில் தடவி ஊறவைத்து குளித்து வர தேமல் மறையும்.
வேப்பிலை கொதிக்கவைத்த நீரை வடிக்கட்டி அதை பருகி வர சரும பிரச்சனைகள் குறையும். மேலும் வேப்பிலையை அரைத்தும் தடவி வரலாம்.
தயிரில் மஞ்சள்தூள் கலந்து தேமலில் தடவி காயவிட்டு குளிக்கலாம்.
ஆடாதோடை இலையை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் ஒரு வாரத்திற்கு வைத்து பின் தடவினால் தேமல் மறையும்.
முள்ளங்கியை மோருடன் கலந்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வரலாம்.