மலையாள நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் கொடுத்த விளக்கம்..!!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் மோகன்லால் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் “மோகன்லால்”.. மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் மிகவும் புகழ்பெற்றவர்… தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்…
மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிழும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு..
64- வயதான நடிகர் மோகன்லால் இன்று மதியம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணம் :
கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில்.., இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு.. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு மோகன்லாலுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுவாச நோய்த்தொற்று நோய் காரணமாக கூட இந்த சுவாசப்பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.. என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்…
அதாவது மோகன்லாலுக்கு அதிக காய்ச்சல் இருந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..
மோகன்லால் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..