மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம்..!! அனல் பறக்கும் விவாத பேச்சுக்கள்..!!
5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.. தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் 39 பேர், 32 நிரந்தர அழைப்பாளர்கள், 13 சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்
நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..