‘டெல்லி கலவரத்தை மறைக்கவே கொரோனா வைரஸ் பீதி’ மம்தா அதிரடி!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி கலவரத்தை மறைக்கவே கொரோனா வைரஸ் பீதி கிளப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகத்தை மிரட்டிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது.இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கொரோனா வைரஸ் பரவுவதால் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி கலவரத்தை மறைக்கவே கொரோனா வைரஸ் பீதி கிளப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸை கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸ் கொடூரமான நோயாக இருந்தாலும் அதுகுறித்து பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும்.

டெல்லி கலவரத்தை மறைக்கவும், திசை திருப்புவதற்காகவும் சில ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதாக்குகின்றன. டெல்லியில் இறந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் இறந்தவர்கள் அல்ல. அவர்கள் கொரோனா வைரசால் இறந்திருந்தால் கூட அதை நாங்கள் ஏற்றிருப்போம். ஆனால் மகிழ்ச்சியோடும், புன்னகை செய்த முகத்தோடும் சென்றவர்கள் இரக்கம் இன்றி கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பா.ஜ.க மன்னிப்பு கூட கேட்கவில்லை. அவர்களின் ஆணவத்தை பற்றி யோசித்து பாருங்கள். அவர்கள் சுட்டுத்தள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றை எச்சரிக்கையாக சொல்கிறேன் உத்தரபிரதேசமும், மேற்கு வங்கமும் ஒன்றல்ல “என்று அதிரடியாக கூறினார்.

What do you think?

சிஏஏ போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம்

‘ரசிகர்கள் என்னை தல என்று கூப்பிடும் போது எனக்கு இப்படி தான் தோணும்’ மனம் திறந்த தோனி!