சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பிகினி மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் அணிந்த இளம் பெண்ணின் வீடியோ தாறுமாறு வைரலானது. தற்போது மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடையில் குளிக்கும் ஆணின் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரிதம் சனானா என்ற 19 வயது இளம் பெண் பிகினி மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் அணிந்து டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அவளுடைய ஃபேஷன் அவுட்பிட்டிற்காக ஒருபுறம் வரவேற்பையும், மறுபுறம் கடும் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தியாவைச் சேர்ந்த இந்த மெட்ரோ ரயில் வீடியோ சர்ச்சை ஓய்வதற்குள் நியூயார்க்கைச் சேர்ந்த நபர் மெட்ரோ ரயிலில் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக்கில் @princezee என்ற பயனர் நியூயார்க் நகர மெட்ரோவிற்குள் இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை நீக்குகிறார். அதன் பின்னர் தான் கொண்டு வந்த சூட்கேஸில் தண்ணீரை நிரப்பி அதற்குள் ஏறி நின்று குளிக்க ஆரம்பிக்கிறார். இந்த வீடியோ இதுவரை 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.