மங்கு நீங்கி சருமம் பொலிவடைய இதை ட்ரைப் பண்ணுங்க்….
முகத்தில் கருப்பு நிற படைகள் வரும். இது உங்கள் முக அழகை கெடுக்கும். இந்த மங்கை வீட்டு வைத்தியம் கொண்டே சரி செய்யலாம்.
ஒவ்வாமை அல்லது அலர்ஜி காரணமாக , தோல் நோய்கள் ஏற்ப்படுகின்றன, அதில் ஒன்றுதான் மங்கு.
கன்னத்தில் கருப்பு நிறத்தில் தோன்றக்கூடிய இதனை மெலஸ்மா என்று அழைப்பர்.
மங்கு உங்கள் முகத்தில் தோன்றுவதை நீங்கள் முன்கூட்டியே கண்டுபிடித்தால் அதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.
மங்கு என்பது கண்ணம் , மூக்கு மற்றும் முழங்கால் பகுதியில் தோன்றும். மங்கு நமது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்படும்.
பொதுவாக இது பெண்களுக்கு தான் அதிகம் வரும். அதுபோலவே ஹார்மோன் பிரச்சனை , ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மொனோபாஸ் இது போன்ற காரணத்தினால் மங்கு உருவாகும்.
செய்முறை:
உங்கள் முகத்தை முதலில் சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மங்கு உள்ள இடத்தில் நன்கு கழுவ வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாலை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் நன்றாக தேய்த்து 5 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும்.
பால் கொண்டு நம் சருமத்தை சுத்தம் செய்தால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கிடும்.
அதற்கு பிறகு கொழுந்தாக இருக்கும் வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து அதனை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
முகத்தை நன்றாக கழுவி கொண்டு மங்கு இருக்கும் இடத்தில் ஃபேஸ் பேக் போட்டு காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.
இதனை முகம் முழுக்க கூட போடலாம் , அப்படி செய்தால் கரும்புள்ளி மற்றும் முகக் கருமை அகன்று முகம் பொலிவு பெறும்.
இம்முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் முகத்தில் மங்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை கண்கூடாக நீங்கள் பார்க்கலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.