‘தமிழிசையை பற்றி அவதூறு’ டிக்டாக் புகழ் மன்னை சாதிக் கைது !

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் குறித்து அவதூறாக புகைப்படம் வெளியிட்ட டிக்டாக் புகழ் மன்னை சாதிக் கைது.

மன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா, பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலமாக வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். மன்னை சாதிக் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் படத்துடன் தனது படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மன்னார்குடி நகர காவல் துறையினர் மண்ணை சாதிக்கை கைது செய்துள்ளனர். மேலும் மன்னை சாதிக்கிற்கு 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும் மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What do you think?

ரவுடிக்கு உதவிய ‘மாஸ்டர்’ வில்லன் – டிக்டாக் வைரல்

‘என் கருத்தை கொண்டு சேர்த்தற்கு நன்றி’ ரஜினிகாந்த்