நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள் உங்கள் பார்வைக்காக..!!
திருப்பூர் மாவட்டத்தில் .தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தாராபுரம் வட்டக்கிளை, தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்..
மயிலாடுதுறை காந்திஜி சாலையில் ரமேஷ் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து நகை கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற ஆரோக்கிய நாதபுரத்தை சேர்ந்த இவாஞ்சலின் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என புதிய தமிழகம் கட்சியின் வேலூர் மாவட்டத்தலைவர் ஜெயசீலன் தலைமையில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ராணிபேட்டை மக்கள் குற்றச்சாட்டு :
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழனூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல போதிய பாதை இல்லாததால் பிணத்தை எடுத்து செல்வதற்கு சிரமம் உள்ளதாகவும் இதுவைரை பல மனுக்கள் வழங்கியும் அரசு அதிகாரிகள் அலட்சிய பதில் கூறுவதாக கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வழித்தடத்தில் ரயில் வரும் நேரத்தில், கேட்டை ஊழியர் மூடும்போது அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ரயில்வே கேட்டில் மோதி நின்றது. இதனால் 10 நிமிடத்திற்கு மேலாக ரயில் நிறுத்திவைக்கப்பட்டு காலதாமதமாக புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..