சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சற்றே குறைந்திருந்தாலும் சவரன் விலை 43 ஆயிரத்தை விட்டு குறையாதது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி (மார்ச் 15), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,380 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 43,040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5,831 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் இன்று வெள்ளியின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் அதிகரித்து 72 ரூபாய்க் 50 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 500 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், வங்கி திவால் போன்ற பிரச்சனைகளால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை எதிர்பார்க்கின்றனர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடும் சற்றே குறைந்துள்ளது, விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.