கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவேன உயர்ந்து வந்த தங்கம்விலை, இன்று அதிரடியாக சரிந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,470 ரூபாய்க்கும், சவரன் 44,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி (மார்ச் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 5,470 ரூபாயாகவும், சவரனுக்கு 800 ரூபாய் சரிந்து 43,760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 100 ரூபாய் சரிந்து 6,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 48,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் குறைந்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.