குழந்தை வரம் தரும் நெல்லுக்கடை மாரியம்மன்…!
அம்மன் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்தவர் என சொல்லுவார்கள். சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற ஒரு பொன்மொழி உண்டு அதே போல். அம்மன் பல அவதாரங்கள் எடுத்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
அப்படியாக நாகை மாவட்டம் ஸ்ரீசௌந்திர ராஜ பெருமாள் வீதியில் எழுந்தருளியுள்ள “நெல்லுக்கடை அம்மன்” சிறப்பு பற்றியும். அந்த கோவிலின் தல வரலாற்றை பற்றியும் படிப்போம்.
நாகப்பட்டிணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜப்பெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார்.
இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அப்படியாக ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த போது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து , நெல் வேண்டும் என கேட்டுள்ளார். நெல்லை அளந்து கூடையில் வைத்து விட்டு , அதற்குரிய காசைவாங்க திரும்பிய பொழுது, அந்த பெண்மணியைக் காணவில்லை. அந்த நெல்லும் அப்படியே இருந்தது.
அன்று இரவு அம்மையாரின் கனவில் தோன்றிய அப்பெண்மணி உன் வீட்டின் அருகே உள்ள வேப்ப மரத்தடியில் நான் புற்றுருக் கொண்டு இருக்கிறேன் என கூறியுள்ளார். மறுநாள் அம்மையார் சென்று மரத்தடியில் தோன்றி பார்த்த போது புற்று இருந்துள்ளது. பின் அந்த புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அந்த கிராம மக்களே வழிபட்டு வந்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் அம்மையாரின் வாரிசுகளால். மக்கள் வழிபட்ட மரத்தடியில், அம்மனுக்கு ஆலயம் ஆலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா மற்றும் செடில் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
பிரிந்த தம்பதியர் இந்த நெல்லுக்கடை அம்மனை வழிபட்டால் ஒன்று சேர்ந்து விடுவார்களாம்.
மேலும் குழந்தை பாக்கியம் வேண்டியவர்களுக்கு அம்மனே குழந்தையாக பிறப்பர் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க :
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..