திருமண தடை நீக்கும் சப்த கன்னியர்கள் வழிபாடு..!! இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்..!!
மற்ற தெய்வங்களை எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அதே அளவிற்கு.., நாம் வழிபாடு சப்த கன்னியரையும் வழிபாடு செய்ய வேண்டும்.., சப்த கன்னியரை வழிபாடு செய்வதனால் கன்னிதோஷம் நீக்கப்பட்டு திருமண வரன் தேடி வரும் என சொல்லுவார்கள்..
அதேபோல் நாம் செய்த பாவங்களை நினைத்து.., மனதார சப்த கன்னியர்களிடம் மன்னிப்பு கேட்டு வணங்கினால்., செய்த பாவங்கள் நீங்குமாம்..
அதுமட்டுமின்றி சப்த கன்னியர்களின் மந்திரத்தை தொடர்ந்து 7 நாட்கள் உச்சரித்தால் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி நற்பலன்கள் கிடைக்கும்..
முக்கியமாக காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த உச்சரிப்பது சிறந்தது..
செய்ய வேண்டிய முறை :
அதிகாலையில் எழுந்து சப்த கன்னியர்கள் முன்பு ஏழு தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்
பழம், பால் அல்லது இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
அதன் பின்னர் தீப ஆராதனை காண்பித்து., பூஜை அறையில் சப்த கன்னியர்கள் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்..
பிரம்மி மந்திரம் :
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி
தந்நோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்…
மகேஸ்வரி மந்திரம் :
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
கௌமாரி மந்திரம் :
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்
வைஷ்ணவி மந்திரம் :
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ ப்ரசோதயத்
வாராகி மந்திரம் :
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
இந்திராணி மந்திரம் :
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்
சாமுண்டி மந்திரம் :
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்..
இந்த மந்திரங்களை தொடர்ந்து 7 நாட்கள் உச்சரித்து வந்தால்.., பாவங்கள் நீங்கும்., திருமணம் விரைவில் நடக்கும்., நற்பலன்கள் கிடைக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..