“சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது..” துணை முதலமைச்சர் உதயநிதி கண்டனம்..!!
சென்னையில் நேற்று இந்தி தின விழாவானது தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். விழா துவக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்ப்பட்டது…
அப்போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்”, என்ற வரிகள் மட்டும் இடம் பெற வில்லை. தமிழ்நாட்டில் எந்த ஒரு விழாவானது தொடங்கினாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவது வழக்கம்.. அப்படி இருக்கையில் வரிகள் விடுபடுவதும் கடும் கண்டனத்துக்குரியது என சர்ச்சைகள் எழத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி., தொல்.திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்..
அவர்களை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற “டிடி தமிழ்” இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து “திராவிடநல் திருநாடு” எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்..
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் “திராவிடம்” வீழாது..! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு , கண்ணியம் குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்..!
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..