முக கவசம், சானிட்டைசர் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!

முக கவசம், சானிட்டைசர்களை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித சமூகத்துக்கு சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கணக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 315 பேர் இந்த கொடூர வைரஸின் கரங்களில் சிக்கியிருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முக கவசம், சானிட்டைசர்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக சானிட்டைசர்களுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதில் 200 மி.லி. சானிடைசர் ரூ.100க்கு விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், முக கவசம், சானிட்டைசர்களை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

Breaking – கடுமையான ஊரடங்கு; மீறுபவர்களுக்கு சிறை!!!

குஜராத் நிறுவனத்தின் ஏகபோகத்திற்கு மத்திய அரசு வழிவகுக்கின்றதா? – வைகோ கேள்வி