தென்சென்னயில் கனிமொழியின் மாஸ் பிரச்சாரம்..!!
சென்னை சைதாப்பேட்டையில், திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மேடையில் பேசிய தலைவர்கள்.,
திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன். தொழிலாளர்களை பாதிக்கப்படும் திட்டங்கள் மட்டும் ஐந்து நிமிடங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடிய தேர்தலில் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் இந்த நாட்டை அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கக்கூடிய நாடாக நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜகவில் இருந்து காப்பாற்ற வேண்டும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல் இந்த தேர்தல் இரண்டாவது சுகந்தர போராட்டம். இந்த ஜனநாயகத்தின் பாதுகாப்பு இருக்கிறாதா என்று கேட்டால் இல்லை என்று தான் உண்மை.
இந்திய எல்லையில் சீனா நாம் இடத்தை கையகப்படுத்தி வருகிறது. அதை பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை மோடி, பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றி வருவார் ஆனால் நாடாளுமன்றத்திற்கு மட்டும் வர மாட்டார்.
நாடாளுமன்றத்திற்கு ஒரு வாரத்திற்கு ஒரு முறை வந்து 5 நிமிடம் இருந்து தோன்றி மறைந்து விடுவார். மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தால் ஒருவருக்கு மட்டும் பேச வருவார். அவர் பேசுவது நாம் எல்லோரும் கேட்க வேண்டும்.
ஏன் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக விற்பனை ஆகிறது என்று கேட்டால் நேருவிடம் போய் விடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க மாட்டார்.
அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தால் அவர் பேசுவது ஜவஹர்லால் நேரு பத்தி மட்டுமே பத்தி பேசுவார். தொழிலாளர்களை பாதிக்கப்படும் திட்டங்கள் மட்டும் ஐந்து நிமிடங்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
நாடாளுமன்றத்தில் பாஜகவினர் எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள். நான் பல்வேறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி வருகிறேன். என்னை சஸ்பெண்ட் செய்த ஒரே கட்சி பாஜக மட்டும் தான்,
பாஜக ஆட்சியில் பெண்களை போற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் 35 லட்சம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான வழக்காக உள்ளது. விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார்கள் விவசாயிகளை வஞ்சிக்கின்ற ஒரே கட்சி பாஜக மட்டும் தான்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பாஜகவினர் கடன் தள்ளுபடி செய்கிறார்கள். பொதுமக்களுக்கு தேவையான கல்வி, விவசாய கடன் எதையும் தள்ளுபடி செய்ய மாட்டார்கள்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு ஒரு பைசா கூட கொடுக்க வில்லை இதுவரைக்கும், வாரநாசி பகுதில் எந்த திட்டம் இருந்தாலும் உடனடியாக பணம் அளிப்பார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ் மீது பற்று வரும், தமிழ் மக்கள் மீது பாசம் வரும் மோடிக்கு சமஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கப்படும் ரூபாய் தமிழ் ஒதுக்குவதில்லை எனவும் தெரிவித்தார்….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..