காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் ராஜினாமா தொடர்பாக உள்துறைக்கு எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக வீரர்கள் ராஜினாமா செய்துள்ளதாக மற்றொரு காரணமும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சில இது தவறான செய்தி என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, எல்.ஓ.சி பகுதியில் இந்தியா பறக்க விட்டிருந்த ட்ரோனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக இ,ன்று அந்த நாட்டு டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. ஆசாத் காஷ்மீரின் பிம்பர் மாவட்டத்தில் இந்த ட்ரோன் சுடப்பட்டதாக பாகிஸ்தான் சொல்கிறது. இதற்கிடையே, பஹால்கம் தாக்குதல் தொடர்பாக 2 ஆயிரம் காஷ்மீரி மக்களிடத்தில் இந்திய ராணுவமும் காஷ்மீர் போலீசாரும் விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளும் உடைக்கப்பட்டு வருகின்றன. ஆஷிப் ஷேக் என்ற தீவிரவாதியின் சகோதரி யாஷ்மீனா என்பவரின் வீடு தகர்க்கப்பட்டுள்ளது.