‘கமலின் இந்த 2 படங்கள் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்’மாஸ்டர் இயக்குனர்!

மாநகரம்,கைதி ஆகிய படங்கள் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

Master Movie Poster

இவர் பல்வேறு மேடைகளிலும் நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் அவருடைய படங்களை பார்த்து தான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் கமலின் சத்யா மற்றும் விருமாண்டி ஆகிய படங்கள் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சத்யா திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும், அதில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் ஒரு வித்தியாசமாக இருந்தது. அதற்காகவே அந்த படத்தை பல முறை பார்த்தேன் என்றும் மேலும் கமல்ஹாசனின் விருமாண்டி படம் ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது. அப்படத்தில் திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஸ்டைல் நான் லீனியர் ஆக இருந்தது. இந்த வார்த்தை கேட்ட பின்பு தான் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தேடினேன். விருமாண்டி படத்திற்கென எப்போதுமே என்னிடம் தனி இடம் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘என் மனைவி உனக்கு,உன் மனைவி எனக்கு’ சென்னையை ஆட்டிப்படைக்கும் மோசமான விளையாட்டு!

‘இந்தியாவுக்கு எதிரான தொடர், தெ.ஆ. அணி அறிவிப்பு’ முன்னாள் கேப்டனுக்கு வாய்ப்பு!