‘ மார்ச் 15’ நாள் குறித்த விஜய், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடித்து வருகின்றனர் . அனிருத் இசையில் உருவாகும் இப்படத்திலிருந்து குட்டி ஸ்டோரி பாடல் மட்டும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image
Master Audio Launch Poster

பொதுவாக பொதுமேடைகளில் அரசியல் பேசி வரும் நடிகர் விஜய் தன்னிடம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து இந்த மாஸ்டர் படத்தின் இசைவெளீயீட்டு விழாவில் பேசுவார் என்று அவரது ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதிலும் அரசியல் கருத்துக்கள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

பெண் சாதனையாளர்களிடம் தனது டிவிட்டர் பக்கத்தை ஒப்படைத்தார் பிரதமர்!

பிரதமரின் டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் சென்னையை சேர்ந்த சாதனை பெண்!