‘தள்ளிப்போகும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி’ பின்னணி என்ன?

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைக்க ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைப்பெற்றது.

அந்த விழாவில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி பேசியது தற்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்க்காக படக்குழுவினர் முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிபோகலாம் என்றும் அதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தான் என்றும் சொல்லப்படுகிறது.

ஆம்,இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் கொரோனா வைரஸ் பீதியால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படம் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.இது வெளிநாட்டு விநியோக உரிமைகளுடன் சேர்த்து விற்கப்பட்டால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும்.

எனவே அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படத்தின் ரிலீஸ் இருக்காது என்று சில விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தகவலின் மூலம் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியிலிருந்து வேறு ஒரு நாளிற்கு தள்ளிபோகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

What do you think?

‘நூதன முறையில் போராடும் ஆடு’ அம்மா, அண்ணனை மீட்டுத்தரகோரி மனு!

‘YES Bank-ல் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது’ ரிசர்வ் வங்கி ஆளுநர் !