‘மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வருமா?’ விஜய் ரசிகர்கள் அப்செட்!

மார்ச் 22ம் தேதி மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 15ம் தேதி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைப்பெற்றது.

மாஸ்டர் படம் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி நிலவுகிறது. மேலும் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். தற்போது இதில் புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

மார்ச் 22 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டீசர் தான் வெளியாகவுள்ளதாகவும் டிரெய்லர் வெளியாகவில்லை என்றும் மார்ச் 31 வரை சில பாடல் வீடியோக்களை வெளியிடவும் அதன்பிறகு சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து டிரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என்று படக்குழு தரப்பில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்துள்ளனர்.

What do you think?

கொரோனா விழிப்புணர்வு – கேரள போலீசாரின் அசத்தல் நடனம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய குத்துச்சண்டை வீரர்!