மாஸ்டர் second single – குத்து போட ரெடியா?

மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கும். ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார், ஏற்கனவே மாஸ்டர் படத்திலிருந்து ‘ஒரு குட்டி கதை’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பற்றி அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில், Students! Vaathi is coming! Kuthu dance poda readyaa என பதிவிட்டுள்ளார். நாளை 5 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என்றும் அந்த பதிவில் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

கொரோனா வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை – விஜயபாஸ்கர்

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க முதலமைச்சரிடம் மனு