முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்!
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் நனப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தை மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விதமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரியும் உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை பழைய முறையிலேயே வழங்க வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
கோடைகாலத்தில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் என்ற பெயரில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
-பவானி கார்த்திக்