மயிலாடுதுறை கோவில் மகா கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கொடவிளாகம் கிராமத்தில் பழமை வாய்ந்த பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில்களில் 03.05.2024 அன்று கும்பாபிஷேகம் நடத்துவதற்க்கு கிராம மக்கள் திட்டமிட்டனர். அதற்கான திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவானது நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது.
கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜையின் நிறைவில் தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை விமான கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கும்பாபிஷேக விழாவை கண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.
-பவானிகார்த்திக்