மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரசேதத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தொடங்கியுள்ளார். பன்முகத்தன்மை,பலமொழிகளை கொண்ட இந்தியாவில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ். படிப்பு கொண்டு வருவதை பலரும் எதிர்த்து வரும் நிலையில் இந்தி மொழியில் மட்டும் எம்.பி.பி.எஸ்யை கொண்டு வருவதில் மாணவர்களுக்கு சில சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆங்கில மொழி பொது மொழியாக மட்டும் அல்ல அது அறிவியல் மொழியாகவும் உள்ளது. இப்போது இந்தியில் மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் அதோடு நிறுத்த மாட்டாரகள் மேற்படிப்பு படிக்க வெளி நாடு செல்லுபவர்களுக்கு அப்போது அறிவியல் பூர்வமான வார்த்தைகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஒரே இடத்தில் மாணவர்கள்,படிப்பை முடித்தவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது வாய்ப்புக்காக அவர்கள் வேறு பிராந்தியங்கள் ,பிரதேசங்கள் செல்லலாம் அப்பொழுது இந்தியில் படித்த மாணவர்களுக்கு அறிவியல் பெயர்களில்,ஆராய்ச்சிகளில்,மேற்படிப்புகள் மேற்கொள்ள முடியமால் போகலாம்.
மருத்தவம் என்பது மத்த படிப்பைப்போன்று அல்ல அது உயிர் மற்றும் ஆரோக்கியம் சார்ந்தது இந்தி வழி பயன்ற மணவர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் பொது அவர்களுக்கு இதனால் கடினமாக இருக்கும். மேலும்,தென்னிந்தியா மாணவர்கள் அனைவரும் இந்தியில் தெரிந்தவர்களை இருப்பார்கள் என்று கூற இயலாது. அம்மாணவர்களுக்கும் இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.