மதிமுக 28-வது பொதுக்குழு ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கைக்காக மதிமுகவின் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28-வது பொதுக்குழு மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மதிமுகவின் 28-வது பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

கொரோனா – சட்டப்பேரவைக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

“சமஸ்கிருதம் ஏனைய மொழிகளை அழித்துவிடும்” – வைகோ எச்சரிக்கை