மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28-ஆவது பொதுக்குழு கூட்டம் 21.03.2020 சனிக்கிழமை நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ, நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில், காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமைதாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நகர்புற உள்ளாட்சித்தேர்தல், கட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What do you think?

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி – கமல் வேதனை

இனி வாக்களர் அட்டையுடன் ஆதார் எண்ணையும் இணைக்கனும்!