திருநெல்வேலியில் மதிமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு மதகு சீரமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு கேரள அரசுகளிடம் மதிமுக சார்பில் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்
மேலும் வருகின்ற பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கரன்கோவிலில் பேரணி நடத்தப்பட உள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துரை வைகோ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையும் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் மதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்