February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது – மதிமுக தீர்மானம்

தாயகத்தில் நடைபெற்ற மதிமுகவின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் ஆகியவை, சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன, அதில் மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாகுபாடு செய்து குடியுரிமை திருத்தச் சட்டம் செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டித்தக்கது என்றும், பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து சமூக நீதி கோட்பாட்டை சிதைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்து தரப்பு மக்கள் மீதும், தமிழக அரசு காவல்துறையை ஏவி விட்டு தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது உள்ளிட்ட தீர்மானங்களும் மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன..

அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதிமுகவின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி, மாவட்டச் செயலாளர் டி.ஆர்.செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Related posts

கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு

Digital Team

அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – திமுக எம்.எல்.ஏ., அப்பாவு சவால்!

Digital Team

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

Digital Team

கடலூரில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் அறிவிப்பு

Digital Team

சீனாவில் சிறைகளையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்!

Digital Team

இந்தியா-இலங்கை குறித்த பேச்சுவார்த்தையில் மகிந்த ராஜபக்சே

Digital Team
You cannot copy content of this page
Madhimugam