வெற்றி கொண்டத்தில் ம.தி.மு.க..!
திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றதை வரவேற்று தூத்துக்குடி தெர்மல் நகர் அனல் மின் நிலையம் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் மதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, 5 லட்சத்து 38 ஆயிரத்து 408 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இவர், அதிமுக வேட்பாளர் ப. கருப்பையாவை விட 3 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருப்பதும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இத்தகைய வெற்றி கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை வரவேற்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருப்பதை வரவேற்றும் தூத்துக்குடி தெர்மல் நகர் அனல் மின் நிலையம் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் மதிமுகவினர் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் முருக பூபதி தலைமையில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி கொடியேற்றி அனல் மின் நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட அவை தலைவர் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநகரத் துணைச் செயலாளர் டேவிட் ராஜ், மாநகரத் துணைச் செயலாளர் முருகேசன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள், வட்டச் செயலாளர் பொன்ராஜ், ஆட்டோ சுப்புராஜ், சங்கர், பொய்யாமொழி, துரை, மற்றும் எம்எல்எப் நிர்வாகிகள் கஜேந்திரன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், கார்த்திகேயன், பிரம்ம நாயகம், முருகேசன், காசிராஜ், பாண்டியராஜ், மயிலேறும் பெருமாள், அந்தோணி ராஜ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு மதிமுக துணை பொதுச்செயலாளர் வைகோவை வாழ்த்தியும், மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோவை வாழ்த்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டது.
-பவானிகார்த்திக்