மூடப்படும் எம்.டி.என்.எல் நிறுவனம்..!! காப்பாற்ற படுமா பி.எஸ்.என்.எல் நிறுவனம்..?
பொதுதுறையை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் எம்.டி.என்.எல் நிறுவனத்தை மூடிவிட்டு, அதில் பணிபுரியும் பணியாளர்களையும், எம்.டி.என்.எல் செயல் பாட்டையும் மற்றொரு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக, இந்நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து நடத்த பல முயற்சிகள் வெகு காலமாகவே பேசப்பட்டு வருகிறது. எம்.டி.என்.எல் நிறுவனத்தை மூடிவிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மட்டும் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றம் ஏன் என்பது குறித்து அரசு அதிகாரியிடம் கேட்ட போது, எம்.டி.என்.எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது, இதனால் 40 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை பி.எஸ்.என்.எல் உடன் இணைத்தால் இன்னும் அதிக நஷ்ட இழப்பீடு ஏற்படும்.
இந்த இழப்பீட்டை பி.எஸ்.என்.எல் சரி செய்ய முடியாது, எனவே தான் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதன் செயல்பாட்டையும், ஊழியர்களையும். BSNLற்கு மாற்ற முடிவெடுத்தோம்.
BSNL நிறுவனம் டெல்லி, மற்றும் மும்பையில் செயல்பாடுகளை துவக்கி விட்டது. இழந்த நிதி நிலைமையை கடந்த ஆண்டே சரி செய்துவிட்டது.., அடுத்த ஆண்டுக்குள் 5G சேவையை தொடங்குவதற்கான செயல்களை செய்து வருகிறது, என அவர் கூறினார்.