அமைச்சர் அன்பில் மகேஷின் ஆய்வின் போதே பள்ளிகளில் மோதலா..!
வேலூர்மாவட்டம், காட்பாடி கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்தவர் மோகன் இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ரஞ்சித் பிரம்மபுரத்தில் சிருஷ்டி என்ற தனியார் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார் நேற்று பள்ளி கேண்டீனில் ரஞ்சித் என்ற மாணவனை அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் சரமாரியாக தாக்குகிறார்.
இதில் மூக்கு தண்டுவடம் உடைந்து ரத்தம் கொட்டியதில் மாணவர் மயங்கி விழுந்தார் சுய நினைவின்றி மாணவர் வேலூர் சி.எம்,சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று பிற்பகலில் தான் மாணவர் சுயநினைவுக்கு வந்துள்ளார், இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தனியார் பள்ளிக்கு நேரடியாக சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளபடுகிறது.
இதனிடையே பள்ளி மாணவர் மயங்கி விழுந்து கவலைக்கிடமான நிலையிலும் பள்ளி நிர்வாகம் இந்த நிகழ்வை மூடிமறைக்கவே முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களும் மிரட்டப்பட்டனர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காட்பாடி மேல்மொனவூர் கேவிகுப்பம் குடியாத்தம் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே தனியார் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது. இது பெற்றோர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பள்ளி கல்வித்துறை எதிர்காலத்தில் இது போன்று பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்ட நிகழ்வும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் அதிகரித்துள்ளது வேதனைக்குரியதாகியுள்ளது.