சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்..!
காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை பெரிய வேலைகளைச் செய்யக்கூடிய மாபெரும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
பார்வைக்கு மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அவசியம்.
வைட்டமின் ஏ, சி, இ போன்ற சத்துக்களை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய் தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..