உத்தரபிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மெகா தங்க சுரங்கங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் 3,350 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. பல வருடங்களாக நடைந்த இந்த ஆய்வுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு மெகா சைஸ் தங்கச் சுரங்கங்கள் இருப்பதை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையமும், உத்தரபிரதேச புவியியல், சுரங்க இயக்குநரகமும் இணைந்து நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் மூலம் இரண்டு சுரங்களிலும் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தியில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டியில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவில் இருப்பு உள்ள 626 டன் தங்கத்தை விட 5 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இங்கு தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 2,345 ஆக அதிகரிப்பு