காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டம்..! தமிழக அரசுடன் சித்தராமையா விவாதம்..!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில் மங்கள பொருட்களுடன் ஆறுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது என்ற நடைமுறை மன்னர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாண்டயா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பியதைத் தொடர்ந்து கார்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தால் அண்டை மாநிலமான அவர்களுக்கு எந்த பிரச்சனையையும் இல்லை எனவும் தெரிவித்தார். ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் மேகதாது நீர்த்தேக்கம் கட்டுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..