“மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேரன் திருமண விழா..” அரசியல் பிரமுகர்கள் – சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பு..!
மதுராந்தகம் அருகே மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேரன் திருமண விழாவில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
மருவத்தூர் என்றாலே எல்லாருக்கும் தெரிந்தவர் மருவத்தூர் அம்மன், மற்றும் மறைந்த பங்காரு அடிகள், தான் நினைவிற்கு வருவார்கள், மருவத்தூர் எல்லை ஆரம்பித்ததும், மருவத்தூர் மருத்துவமனை, மருவத்தூர் கல்லூரி, தொழில் நுட்பம் என அனைத்திற்கும் பிரசித்தி பெற்றது.. என சொல்லலாம்.
இவை மட்டுமா, பங்காரு அடிகளார் குடும்பத்தில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி உடல் ஊனமுற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வது வழக்கம், அந்த வகையில் இன்று
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மூத்த மகனான அன்பழகன் மகன் அகத்தியன் ஷாலினி இல்ல திருமண விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் பொன்முடி, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் துரைமுருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் பாமக அன்புமணி ராமதாஸ், செளமியா அன்புமணி,பங்கேற்று மணமக்களை வாழ்த்தி, அவர்களது எக்ஸ் வலைத்தளம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.
ஓபிஎஸ் பன்னீர்செல்வம், ஜி கே வாசன், நடிகை ரோஜா, காமெடி நடிகர் செந்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.,
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என கட்சி பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் இயக்குநர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..