சுவையான தேங்காய் பிஸ்கட் இனி வீட்டில் செய்ங்க…
மைதா மாவு – 100 கிராம்
வெண்ணெய் – 80 கிராம்
சர்க்கரை – 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் – 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் – 15 கிராம்
உப்பு – சிட்டிகை
வெண்ணெயை உருக்கி அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
மேலும் அத்துடன் சர்க்கரை, வெனிலா சுகர் பவுடர், மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
அனைத்தையும் நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பிசைந்த மாவை அரை மணி நேரத்திற்கு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
பின் அரை மணி நேரத்திற்கு பிறகு ஃபிரிஜ்ஜில் இருந்து எடுத்து சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.
பின் அதனை உங்களுக்கு பிடித்த வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய பீசை எண்ணெய் தடவிய ட்ரேயில் தனி தனியாக வைக்க வேண்டும்.
மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்சியஸில் பிரி ஹீட் செய்து பின் அந்த ட்ரேவை வைத்து 15 நிமிடத்திற்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
அவ்ளோதான் சுவையான தேங்காய் பிஸ்கட் ரெடி.