ரயில்வே அதிகாரிகளுக்கு மனநல ஆலோசனை கொடுக்க வேண்டும்..!! ரயில்வே துறை உத்தரவு..!!
கடந்த சில தினங்களாக ரயில் விபத்துகள் தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஒடிசா மாநில கோர ரயில் விபத்து, மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 288 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்ற அமைப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என சில அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்த விபத்தில் ஏதேனும் சதி திட்டம் உள்ளதா, அல்லது இதற்கு பின் யாரவது இருக்கின்றார்களா என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் ரயில்வே வாரியம், மண்டல அதிகாரிகளுக்கு சில அறிக்கை விட்டுள்ளது. அதாவது ரயில்களின் இயக்கம் சீரக இருக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடுவோர் எந்த குழப்பமும், மன அழுத்தமும், டென்ஷனும் இருக்க கூடாது.
எனவே ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் கட்டுப்பாட்டாளர் மற்றும் பாயின்டஸ் மேன் போன்றோருக்கு அவ்வப்போது மனநல ஆலோசனை கொடுக்க வேண்டும். என ரயில்வே வாரியம் கூறியுள்ளது.
ஒரு சில மண்டலங்களில் இந்த அறிக்கை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி அனைத்து மண்டலங்களிலும் இந்த செயலை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளனர்.