தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர கர்நாடகம், அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் நேற்று மழை பெய்திருந்தது. இப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. இருப்பினும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவினாலும், அவ்வப்போது வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What do you think?

இணையத்தை கலக்கும் ‘டிராம்பாகுபாலி’ – மிரட்டல் வீடியோ

மத சுதந்திரம் பற்றி டிரம்ப் மோடியிடம் பேசுவார் – வெள்ளை மாளிகை