பண்ரூட்டி பெட்ரோல் பங்கில் பதுக்கப்பட்ட மெத்தனால்..! சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வீரபெருமாநல்லூரில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த நிலையில். இன்னும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வழக்கு தற்போது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.
அதில் முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல தகவல்கள் வெளியானது. வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இரவு நேரங்களில் லாரி மூலம் கடத்திவரப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக சில தகவல்களை தெரிவித்துள்னர்.
பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால், ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக மாதேஷ் அளித்த வாக்குமூலத்தை அடுத்து சோதனை நடத்தினர். அதன் படி பண்ரூட்டி பெட்ரோல் பங்க்-ல் ஆய்வு செய்த போது பெட்ரோல் பங்க் கீழே உள்ள டேங்குகளை ஆய்வுசெய்த போது 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மெத்தனால் பதுக்கியதை அடுத்து பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-குக்கு சிபிசிஐடி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர். மேலும் அந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..