மெட்ரோ ஏற்பாடு பணி மாற்றம்..!! சென்னை மாநகராட்சி அறிக்கை..!!
போக்குவரத்து.., மாற்று ஏற்பாட்டு பணிகளின் நிலை குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின் நடைபெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட 25 இடங்களில் மட்டும் மழைநீர் வடிகால் கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாக மெட்ரோ கட்டுமான பணி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது..
நேற்று இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.. குறிப்பாக சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில்.. இதனால் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் மூடப்பட்டதால் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளித்துள்ளது.. இரண்டு நாட்களாக இரவில் பெய்த கனமழைக்கே இப்படி தண்ணீர் தேங்கிவிட்டது என்றால்..? இனி வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரும் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால்.., இந்த பருவ மழையால் சென்னையின் முக்கிய இடங்களில் நீர் தேங்கும் அபாயம் இருக்கும்..
மழைநீர் தேங்குவதை தடுப்பது குறித்து மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநர் குழு 25 இடங்களிலும் மாற்று ஏற்பாடுகள் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும்.. மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து பணிகளும் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்து கொடுக்கும் படி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு மாநகராட்சி சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது..
மாநகராட்சி அறிவுறுத்தல்படி ஒக்கியம்மடுகு கால்வாய் நீர்வழி பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.. இன்னும் ஒரு வாரத்திற்குள் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் போரூர்., குன்றத்தூர்., கிளாம்பாக்கம், ராயப்பேட்டை, உள்ளிட்ட 18 இடங்களில் மழைநீர் வெளியேற கனரக மோட்டார்கள், குழாய்கள் அமைத்து மழைநீரை வெளியேற்றுவதற்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.. என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது..
மீதமுள்ள 7 இடங்களில் பணிகள் நாளை தொடங்க இருப்பதாகவும் அந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சிக்கு மெட்ரோ நிர்வாகம் அறிக்கை சமர்பித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..