விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மெட்டி ஒலி 2 சீரியல்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
சின்னத்திரையில் சீரியல் எடுப்பது படம் எடுக்கும் அளவிற்கு கடினமான ஒன்று.., மக்கள் மனதில் ஒரு சீரியல் இடம் பிடித்து அதில் நடிக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாக வேண்டும்.., அது டிஆர்பியில் இடம் பிடித்து.., நிறைய எபிசோட்கள் எடுக்க பட்டால் மட்டுமே.., ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.
ஒரு சிலர் தொடர்கள் மட்டும் தான்.., டிவியில் இருந்து விடுதலை பெற்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும். அப்படி பல ரசிகர்களை வெகு விரைவாக கவர்ந்த ஒரு தொடர் “மெட்டி ஒலி” அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘மெட்டி ஒலி கோபி’ என்ற பெயரில் தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் தான் திருமுருகன்.
மெட்டி ஒலி சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜ்காந்த், சேத்தன், சஞ்சீவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
இந்த சீரியலை இயக்கிய திருமுருகன் அனைவருக்கும் தெரியும். அதிலும் மெட்டி ஒலியில் வரும் “அம்மி அம்மி மிதித்து.., அருந்ததி முகம் பார்த்து” என்ற பாடல் ஒலிக்காத இல்லங்களே இல்லை, இந்த சீரியல் ஏப்ரல் 8, 2002 முதல் அக்டோபர் 14, 2005 வரை ஒளிபரப்பானது.
5 மகள்கள் ஒரு தந்தை, ஒவ்வொரு மகளின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திறுக்கும். ஒவ்வொருவரின் எதார்த்தமான நடிப்பும்.., இயல்பான வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல்.., 1000 எபிசோட்களை கடந்து மக்கள் மனதிலும் வெற்றி பெற்றது.
மெட்டி ஒலி 2 எப்பொழுது வரும்.., என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் மெட்டி ஒலி 2 விரைவில் ஒளிபரப்பாகும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியலையே திருமுருகன் எடுக்க போவதாகவும்.., திரு பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..