உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த மெக்சிகோ பெண்களின் போராட்டம்

Women demonstrate at the "They Don't Protect Me, They Rape Me" protest to demand justice for two teenage girls that local media reported were apparently raped by policemen, in Monterrey, Mexico August 16, 2019. REUTERS/Daniel Becerril

மெக்சிகோவில் பெண்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பெண்கள் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 80 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.அமைதியாகத் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் கற்களை வீசியதாகவும், அவர்கள் தடிகளைக் கொண்டு அரசு அலுவலகங்களைத் தாக்கியதாகவும் மெக்சிகோ அரசு குற்றம்சாட்டியது. இதனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இதில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.ஏற்கனவே அரசு மீது அதிருப்தியில் இருந்த மெக்ஸிகோ பெண்கள், இந்த தடியடி தாக்குதலால் கொதித்தெழுந்தனர்.

இதனால் ‘நாங்கள் இல்லாத ஒரு நாள்’ என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் பெண்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். திங்களன்று நடந்த இந்த வேலை நிறுத்தத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் பள்ளிகளுக்குச் செல்லும் சிறுமிகள் வரை அனைவரும் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 67% மெக்சிகோ பெண்கள் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்ததால் உலக அளவில் இந்த வேலை நிறுத்த போராட்டம் கவனம் பெற்றது.

தொடர்ந்து, மெக்சிகோவில் பெண்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மெக்சிகோவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களும் முடங்கி யுள்ளன.

What do you think?

‘இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி’ 76 வயதான முதியவர் உயிரிழப்பு

‘மாஸ்டர் குறித்த CSKவின் வைரல் Tweet’ மாஸ்டர் படக்குழுவின் ரியாக்சன்!